Published : 26 May 2021 02:35 PM
Last Updated : 26 May 2021 02:35 PM

தமிழகத்தில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று (மே 25) இரவு, 21 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதில், பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், மேலும் 6 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று (மே 26) வெளியிட்ட உத்தரவு:

"1. சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த விக்ரம் கபூர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை முதன்மைச் செயலாளராக இருந்த மங்கத் ராம் ஷர்மா, பாசனம், விவசாயம் மற்றும் நீர்நிலைகள் புனரமைத்தல் மற்றும் நிர்வாகம் (IAMWARM) திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிர்வாக இயக்குநர் மற்றும் IAMWARM திட்ட இயக்குநராக இருந்த விபு நாயர், நிலப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜெயஸ்ரீ ரகுநந்தன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை (பயிற்சி) இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சிகி தாமஸ் வைத்யன், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.".

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில துறை அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x