

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய மாநிலப் பொறுப்பாளர்கள் எண்ணிக்கையைவிட அங்கே எஞ்சியிருப்பவர்களை விரல்விட்டு எண்ணிச் சொல்லிவிடலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு தினம் ஒரு முக்கிய பொறுப்பாளர் கமலுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருக்கிறார். மய்யத்திலிருந்து வெளியேறி இருக்கும் முக்கிய நிர்வாகிகளில் சிலர் திமுக தரப்புடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். கூடிய சீக்கிரமே அவர்கள் கூட்டாக திமுகவில் இணையலாம் என்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்