

இ-பதிவு இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், அத்தியாவசியப் பணிகளுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டு, அப்பணிகளை மேற்கொள்ள வாகனங்களில் சென்று வர ஏதுவாகஇ-பதிவு முறை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் சாலை மறியல்
ஆனால், இ-பதிவைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை திருப்பி தரக்கோரி 2-வது நாளாகவாகன ஓட்டிகள் திருவொற்றியூரில் சாலை மறியல் செய்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கள் வாகனங்களில் உள்ள உதிரிபாகங்கள் காணாமல் போக லாம் என்பதே அவர்கள் மறியல்செய்ய காரணமாகும்.காவல் துறையினருக்கும் தற்போதுள்ள வேலைபளுவில் பறிமுதல் செய்யப்பட்டவாகனங்களை 24 மணிநேரமும்கண்காணிப்பது என்பது மிகவும் கடினமான செயல்.
எனவே வாகன ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து, சட்டத்துக்குட்பட்டு தமிழகத்தில் இ-பதிவு முறையில் அனுமதியுடன் இயக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும் அதன் உரிமைதாரர்களிடம் உடனடியாக திரும்ப ஒப்படைக்க காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.