

உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக, இண்ட்கோ சர்வ் தேயிலை தொழிற்சாலைகளின் மேலாண்மை இயக்குநர்களுடன் நீலகிரி மாவட்டம் குன்னூர் இண்ட்கோ சர்வ் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "இண்ட்கோ சர்வ் தலைமைச் செயல் அலுவலர்சிறப்பான முறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, இண்ட்கோ சர்வ் தொழிற்சாலைகளை வளர்ச்சிபாதையில் எடுத்துச் செல்கிறார். கடந்த காலங்களை ஒப்பிடுகையில், இண்ட்கோ சர்வ் லாபகரமான நிலையில் இயங்குகின்றன. தரமான பசுந்தேயிலை மூலமாகதேயிலை தூள் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கும் தரமான தேயிலை தூள் கிடைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதைத்தொடர்ந்து, கோத்த கிரி வட்டம் கட்டபெட்டு தேயிலை தொழிற்சாலையின் செயல்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.இண்ட்கோ சர்வ் தலைமைச் செயல்அலுவலர் சுப்ரியா சாஹூ, ஆலோசகர் நிவாசன் ராம் உள்ளிட்டஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.