

டிஎன்பிஎஸ்சி நடத்தும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன் பிஎஸ்சி) கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான நேரடி நியமனத்துக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. கடந்த 14-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழை காரணமாக இத்தேர்வுக்கு விண்ணப் பிப்பதற்கான கடைசி தேதி வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பதவிக்கு பிப்ரவரி 14-ம் தேதி நடக்க இருந்த தேர்வும் பிப்ரவரி 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.