

மதுரை ரயில்வே கோட்டத்தில் கரோனாவால் இறந்த அதிகாரிகள், ஊழியர்கள் குடும்பத்தினருக்கு ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் ஆறுதல் தெரிவித்து கடிதங்களை அனுப்பி உள்ளார்.
மதுரை ரயில்வே கோட்டத்தில் கரோனா முதல் அலையில் தொற்று பாதித்து அதிகாரிகள் மேத்யூ, பிரபாகர், மூர்த்தி, ரயில்வே தலைமைக் காவலர் னிவாசன் ஆகியோரும், இரண்டாவது அலையில் அதி காரிகள் ஜெகதீசன், பேபி ரமணி, செல்வராஜ், சுரேஷ்பாபு, சிவராஜ், முத்துக்கருப்பணன், டிராலிமேன் சோமு ஆகியோரும் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தனித்தனியே கடிதம் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் எனது அனுதாபங்களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்கிறேன். கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தன்னலமற்ற சேவையில் ரயில்வே தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இந்நேரத்தில் அவர்களின் கடின உழைப்புக்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கும் வலிமையை உங்களுக்கு இறைவன் வழங்கட்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரி வித்துள்ளார்