Published : 26 May 2021 03:14 AM
Last Updated : 26 May 2021 03:14 AM

காரைக்குடி அரசு மருத்துவமனையில் படுக்கை இல்லையென மூதாட்டியை விரட்டிய மருத்துவர்கள்: 14 படுக்கைகள் காலி என ஆன்லைனில் தகவல்

காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் ஆம்புலன்ஸிலேயே மூச்சு திணறலுடன் காத்திருந்த மூதாட்டி.

காரைக்குடி

காரைக்குடி அரசு மருத்துவ மனையில் 14 படுக்கைகள் காலியாக இருப்பதாக ஆன் லைனில் தகவல் தெரிவிக்கப்பட்டும், படுக்கை இல்லையென கூறி மூச்சுத் திணறலோடு வந்த மூதாட்டியை மருத்துவர்கள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு இணையதளத்தில் காரைக்குடி அரசு மருத்துவ மனையில் கரோனா வார்டில் 116 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உட்பட 120 படுக்கைகள் இருப்பதாகவும், அதில் 14 படுக்கைகள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

நேற்று மாலை கானாடுகாத்தான் அரசு மருத்துவமனையில் இருந்து 60 வயதுள்ள மூதாட்டி மூச்சுத் திணறல் காரணமாக காரைக்குடி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டார். ஆனால் படுக்கை வசதி இல்லையெனக் கூறி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரோ தனக்கு பரிந்துரைக் கடிதம் கொடுத்தால்தான் சிவகங்கைக்கு கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவித்தார். அதேபோல் மூதாட்டியின் உறவினர்களும் காரைக்குடியில்தான் சேர்க்க வேண்டுமென தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினரி டையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு ஒருவழியாக காரைக்குடி மருத்துவமனையிலேயே மூதாட்டியை அனுமதித்தனர். இதனால் அரைமணி நேரமாக ஆம்புலன்ஸிலேயே மூச்சுத் திண றலோடு மூதாட்டி சிரமப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x