

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு திமுக எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ரூ. 50 லட்சமும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக சார்பில் ரூ. 1 கோடி வெள்ள நிவாரண நிதியை நிதித் துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகத்திடம் கடந்த நவம்பர் 24-ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதுபோல திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என கடந்த 12-ம் தேதி கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.