

சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி29 ராக்கெட் இன்று மாலை 6 மணிக்கு விண்ணில் செலுத் தப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஸ்ரீஹரிகோட்டா வில் தயாராக உள்ளன.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிங்கப்பூர் நாட்டுக்கு சொந்தமான 6 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி சி29 ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 59 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கியது.
பிஎஸ்எல்வி சி29 ராக்கெட், திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப் படுகிறது. இதில் அனுப்பப்படும் 6 செயற்கைக் கோள்களும் 550 கி.மீ. தொலைவில் புவி சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்படும்.
இதற்கிடையே, இஸ்ரோ தலைவர் கிரண்குமார் சென்னை யில் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பிஎஸ்எல்வி சி29 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத் தப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன’’ என்று தெரிவித்தார்.