தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 குறைவு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.168 குறைவு
Updated on
1 min read

சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.19 ஆயிரத்து 224க்கு விற்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் நேற்று ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.19 ஆயிரத்து 224க்கு விற் கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2,403-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2,424-க்கு விற்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in