

தேவைகள்: பிளாஸ்டிக் பாய்கள், போர்வைகள், குழந்தைகளுக்கான டயப்பர்ஸ் - உடைகள், சானிடரி நாப்கின்ஸ், கொசுவிரட்டிகள், கொசு வலைகள், கொசுவர்த்தி, புதிய உடைகள், நைட்டீஸ், பேட்டரியுடன் கூடிய டார்ச் லைட்டுகள், பால் பவுடர் மற்றும் தண்ணீர் பாட்டில்கள்.
பேக்கிங்: நீங்கள் வழக்கும் நன்கொடை பொருட்களை ஒரு பெட்டியில் பாதுகாப்பாக வைத்து பேக்கிங் செய்து அதில், 'மீள்கிறது சென்னை', தி இந்து குரூப், கஸ்தூரி பில்டிங், 859&860, அண்ணா சாலை, சென்னை - 600002 என்ற முகவரியை எழுதவும். உங்கள் முகவரியையும் பேங்கிங்கில் தவறாமல் குறிப்பிடவும்.
அனுப்பு முறை: உங்களது பேக்கிங்கை அருகில் உள்ள கேபிஎன் அலுவலகத்தில் ஒப்படைத்துவிடலாம்.
> நேற்றைய தினம் (திங்கள்கிழமை)‘தி இந்து’ வெள்ள நிவாரண முகாமில் ஓடிக்கொண்டிருந்த எவருக்கும் இன்னொருவரின் பெயர் தெரியாது. ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லை. ஜாதி, மதம், வர்க்கம், ஆண், பெண், வயது அத்தனையையும் கடந்து அவர்களை ஒன்றிணைத்தது சென்னையின் வெள்ளம். எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகளாயினர்.
சுமார் 200 பேர் ராணுவத்தின் கட்டுக்கோப்புடனும் தெளிவான திட்டத்துடனும் செயலாற்றிய வேகம் பிரமிக்க வைத்தது. | முழுமையாக வாசிக்க -> களத்தில் 'தி இந்து': 'ஸ்டெபி.. உன்னால் உலகம் உயிர்ப்போடு இருக்கிறது!' - ‘தி இந்து’ வெள்ள நிவாரண முகாம் நெகிழ்ச்சி...
> தலைநகரில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக் கணக்கான பொதுமக்களுக்கு உதவும் நோக்கில் வாசகர்களுடன் இணைந்து ‘தி இந்து’ தமிழ் மேற்கொண்டு வரும் நிவாரண உதவி சேவையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பத்தாயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான இளை ஞர்களும், தன்னார்வலர்களும், தம்பதிகளும் குடும்பம் சகிதமாக ‘தி இந்து’ நிவாரண மையத்துக்கு நேரில் வந்து, மக்கள் சேவையில் தங்களை இணைத்துக் கொண்டனர். | அதன் விவரம்> சென்னையில் வாசகர்களுடன் 'தி இந்து' நிவாரண உதவி: ஒரே நாளில் பத்தாயிரம் பேருக்கு உணவு - குடும்பத்துடன் அணிதிரண்ட தன்னார்வலர்கள்
> சென்னையில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, 'தி இந்து' தமிழ் சார்பில் நிவாரண உதவிப் பொருட்கள் நேற்று (சனிக்கிழமை) வழங்கப்பட்டன. நேற்று ஒரு நாளில் மட்டும் பத்தாயிரம் பேருக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. | அதன் விவரம்: >‘தி இந்து’ வாசகர்கள் உதவிக்கரத்துடன் சென்னையில் நிவாரண சேவை