திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு

ஆம்பூரில் அமைக்கப்பட்டு வரும் சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி.
ஆம்பூரில் அமைக்கப்பட்டு வரும் சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.காந்தி.
Updated on
2 min read

திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப்பணிகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 25 கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவ மனைகளில் கூடுதல் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள், சித்த மருத்துவ மையம் ஆகியவற்றை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான பணிகள் திருப்பத் தூர், ஆம்பூர், நாட்றாம்பள்ளி மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் நடைபெற்று வருவதை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று நேரில் ஆய்வு செய்தார். திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, திருப்பத் தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகரிக்கவேண்டும் என சுகாதாரத்துறை யினர் தெரிவித்தனர். அதன் பிறகு, நாட்றாம்பள்ளி அரசு மருத் துவமனைக்கு சென்ற அமைச்சர் ஆர்.காந்தி அங்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திர வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து விரை வாக பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, வாணியம் பாடி அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு நடத்தினார். அங்கிருந்து ஆம்பூர் வர்த்தக மையத்துக்கு வந்த அமைச்சர் ஆர்.காந்தி அங்கு 100 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ள கரோனா சிறப்பு வார்டுக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை பொருத்தி கரோனா சிறப்பு மையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஆம்பூரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சித்த சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டார். அப்போது சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் மூலிகை முகக்கவசம், மூலிகை மருந்துகள் ஆகியவற்றை பயன் படுத்தி கரோனா நோயாளிகளை விரைவாக குணப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்) தேவராஜ் (ஜோலார்பேட்டை) ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், சித்த மருத்துவர்கள் விக்ரம்குமார், டி.பாஸ்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 250 படுக்கை வசதிகளுடன் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி பொருத்தும் பணிகளையும், நடமாடும் கழிப்பறை பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன், அரசு மருத்துவமனையின் குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in