ஈரான் சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 24 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்திடுக: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஈரான் சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 24 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்திடுக: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
Updated on
1 min read

ஈரான் சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் 24 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "கடந்த 22-03-2021 அன்று, ஈரான் நாட்டிலிருந்து, அந்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் என 24 இந்திய மீனவர்கள், கடந்த
25.03.2021 அன்று கத்தார் நாட்டு கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக கத்தாரில் உள்ள ரஸ் லாஃபான் காவல் நிலையத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது நிலை என்னவானது என்று அறியாமல் கவலையடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர் அரசு உடனடியாக தலையிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் அவர்கள், மேற்கூறிய விவரங்களைக் குறிப்பிட்டு, கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வாயிலாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்து, தாயகத்திற்கு அனுப்பிட வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in