

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் தொடரும் என இந்திய ஜனநாயக கட்சி நிறுவன (ஐஜேகே) தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனமழையால் அனைத்தையும் இழந்த மக்கள் அதிலிருந்து மீண்டு, தங்களின் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப எங்கள் கட்சி சார்பில் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். 4 நாட்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, புடவை, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை கொண்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய 16 ஆயிரம் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேபோல், சிம்ஸ் மருத்துவமனை மற்றும் எஸ்ஆர்எம் மருத்துவமனை இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் , விழுப்புரம் மாவட்ட மக்கள் இயல்பான நிலைக்கு திரும்பும் வரை அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படும்.