

கரோனா சிகிச்சையில் இருந்து திரும்பிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக கூடிய எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சற்று கோபமாகவே பேசிய எடப்பாடியார், “கட்சிக்கு நீங்க துணை ஒருங்கிணைப்பாளரா இருக்கீங்க. ஆனா, உங்களோட டெல்டா மண்டலத்துல நாலே நாலு பேர் தான் ஜெயிச்சிருக்கீங்க. நாங்களெல்லாம் எங்க மண்டலத்த அப்படியா வெச்சிருக்கோம்... நீங்க நல்லபடியா கட்சிக்கு உழைச்சிருந்தா நம்ம தான் மறுபடி ஆளும்கட்சியா வந்துருப்போம்” என்று சொன்னாராம். அதற்கு, “டெல்டா மண்டலத்துல என்னைய யாரு சுயமா செயல்பட விட்டா? தங்கமணியும் வேலுமணியும் தேவையில்லாம உள்ள புகுந்து கட்சிக்குள்ள குழப்பம் பண்ணாங்க. அதுக்கு நான் என்ன செய்யமுடியும்?” என்று சொல்லிவிட்டு கிளம்பிய வைத்தி, அந்த வருத்தத்தில்தான் எம்எல்ஏ-வாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாராம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்