

தமிழகத்தில் ஒரு வார காலத்துக்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி, மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். ஊரடங்கைமீறியவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்ததால் தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இரவிலும்வாகன சோதனை தொடரும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த44 நாட்களில் முகக் கவசம் அணியாதவர்கள் மீது 11.11 லட்சம் வழக்குகள், தனிமனித இடைவெளியை பின்பற்றாதோர் மீது 49,923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.