குடிநீர் தருவதற்குகூட பொதுமக்கள் தயங்குவதால் மாநகராட்சி சார்பில் உணவு, உபகரணம் வழங்க வேண்டும்: தூய்மை பணியாளர்கள் எதிர்பார்ப்பு

குடிநீர் தருவதற்குகூட பொதுமக்கள் தயங்குவதால் மாநகராட்சி சார்பில் உணவு, உபகரணம் வழங்க வேண்டும்: தூய்மை பணியாளர்கள் எதிர்பார்ப்பு
Updated on
1 min read

கரோனா அச்சம் காரணமாக, குடிக்க தண்ணீர் தரக்கூட பொதுமக்கள் தயங்குவதால், ஊரடங்கு காலத்தில் தங்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் எதிர்பார்க் கின்றனர்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மாநகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களாாக உள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

மாநகராட்சியில் 1900 நிரந்தரம் மற்றும் 3685 தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் உள்ளனர். காலை 5.30 மணிக்கே தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் பணிகளைத் தொடங்கும் இவர்களுக்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள தேநீர் மற்றும் சிற்றுண்டி கடைகள்தான் உணவுக்கான ஆதாரங்களாக இருந்து வந்தன.

தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தேநீர், சிற்றுண்டி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

உணவகங்களில் பார்சல் வசதி அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான உணவகங்கள் கரோனா தொற்று அச்சத்தால் மூடிய நிலையில் உள்ளன. இதனால், வார்டுகளில் பசியுடன் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.

முன்கள பணியில் உள்ள தங்களுக்கு உணவு ஏற்பாடு மற்றும் கையுறை, முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர், தூய்மைப் பணியாளர்கள்.

இதுகுறித்து, தூய்மைப் பணியாளர் ஒருவர் கூறும்போது, “காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரை தூய்மைப் பணி மேற்கொள்கிறோம். அதிகாலை நேரத்தில் சமைக்க இயலாது என்பதால், நேராக பணிக்கு வந்து விடுவோம். தேநீர் கடைகளில் ஏதேனும் சாப்பிட்டு, தொடர்ந்து பணியை மேற்கொள்வோம்.

தற்போது கடைகள் அடைக்கப் பட்டுள்ளன. நாங்கள் வாங்கும் ஊதியத்தில் உணவகங்களில் பார்சல் வாங்கி சாப்பிட இயலாது. கரோனா தொற்று அச்சத்தால், வீடுகளில் குடிநீர் கேட்டாலே தருவதற்கு பொதுமக்கள் தயக்கம்காட்டுகின்றனர். கடந்த முறை ஊரடங்கின்போது அம்மா உணவகங்களில் எங்களுக்கு சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டிருந் தது. தற்போது அனுமதி இல்லை.பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். பிற முன்கள பணியாளர் களுக்கு அளிப்பதுபோல, எங்களுக்கும் வேலை செய்யும்இடத்துக்கே உணவு பொட்டலங்கள், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், கையுறை உள்ளிட்டகரோனா பாதுகாப்பு உபகரணங் களும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “முழு ஊரடங்கு காலம் என்றாலும் உணவகங்களில் பார்சல் வசதி உள்ளது. அவர்கள்வாங்கி சாப்பிடலாம்.

இருப்பினும் ஸ்பான்சர்கள் மூலமாக உணவு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்களது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே சமீபத்தில் அனைவருக்கும் கரோனாபரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. பாதுகாப்பு உபகர ணங்களும் வழங்கப்படுகின்றன” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in