

கோவை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகளுடன் 11 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கடந்த சில நாட்களாககருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப் பட்டு வருகிறது. பாதிப்புக்குள்ளானவர் களுக்கு தொடர்சிகிச்சை அளித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் வரை 21 பேருக்கு தொற்று உறுதியானது. எந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தொற்று உறுதிசெய்யப் பட்டாலும் அதை உடனடியாக சுகாதாரத் துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 11 பேர் கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறும்போது, “கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கமருத்துவமனையில் இப்போதைக்கு தனியே 20 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள் ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கேற்ப படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.தொற்று இருக்கலாம் என அறிகுறிகளுடன் அணுகுபவர்களை அனுமதித்து சிகிச்சைஅளிக்கிறோம். தொற்று இருப்பதை பகுப்பாய்வு (பயாப்ஸி) பரிசோதனையில்தான் உறுதி செய்ய முடியும்" என்றார்,