தற்காலிக மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி கரோனா சிகிச்சை மையத்தில் இன்று முதல் பணியாற்றுவர்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையத்தில் தற்காலிகமாக பணியாற்ற உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி யாளர்களுக்கு பணி நியமன ஆணையை ஆட்சியர் ம.கோவிந் தராவ் முன்னிலையில், திருவை யாறு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் நேற்று வழங்கினர்.
பின்னர், துரை.சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 100 மருத்துவர்கள், 100 செவிலியர்கள், 57 மருத்துவ உதவியாளர்கள் மாவட்ட நலச் சங்கம் மூலமாக தேர்வு செய்யப் பட்டு, அவர்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. மருத்துவர்களின் தேவையைக் கருதி முதல்வரின் உத்தரவுபடி, பணி ஆணை வழங் கப்பட்டுள்ளது. பணி ஆணை பெற்ற அனைவரும் நாளை(இன்று) முதல் பணியை தொடங்கு வார்கள்.
தனியார் தொண்டு நிறுவனங் களான ஆனந்தம் சில்க்ஸ், தஞ் சாவூர் தொழில் வர்த்தக சங்கம், ரெட் கிராஸ், பார்மசி அசோசியேசன் ஆகியவை சார்பில் 50, மத்திய அரசு சார்பில் 100, சிட்டி யூனியன் வங்கி சார்பில் 100 என மொத்தம் 250 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொறுத் தவரை பல மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக் காக வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் படுக்கை வசதி அளித்து, உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று 2-வது அலையின் தாக்கம் அதிதீவிரமாக இருப்பதால், அதற்கு தக்கவாறு மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.
முன்னதாக, மின்சார வாரியத் தில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்டு, தஞ்சாவூர் மாந கராட்சி சார்பில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறி விற்பனையை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.பழனி, மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் எஸ்.விஜயகவுரி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ச.மருததுரை, வட்டாட்சியர் பால சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
