சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை எழும்பூர், திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அடுத்த மாதம் 17-ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00631) மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்கும்.

அடுத்த மாதம் 18-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06148) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருபாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 25-ம் தேதி (இன்று) தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in