

அமைச்சராக இருந்தபோது, “வெட்டுவேன்... குத்துவேன்” எனப் பேசிப்பேசியே பலரையும் பகைத்துக் கொண்டார் ராஜேந்திர பாலாஜி. அதெல்லாம் சேர்ந்து இப்போது அவரை பயமாக துரத்துகிறதாம். இப்போது பாலாஜி எங்கு சென்றாலும் அவரது ஃபார்ச்சூனர் காருக்குப் பின்னால் ஒரு ஸ்கார்பியோ காரும் செல்கிறது. அந்தக் காருக்குள் கட்டுமஸ்தான ஆட்கள் ஐந்து பேர் எப்போதும் இருக்கிறார்கள். எஸ்கார்டு டூட்டிக்காக காலை 7 மணிக்கெல்லாம், திருத்தங்கலில் உள்ள பாலாஜியின் வீட்டில் ஆஜராகிவிடும் இவர்களில் சிலர் விவகாரப் பின்னணி உள்ளவர்களாம். முன்பெல்லாம் தனது காரில் விசுவாசிகளையும் ஏற்றிக் கொள்ளும் பாலாஜி, இப்போது யாரையும் ஏற்றுவதில்லை. தனியாளாகவே பயணிக்கிறாராம். இதையெல்லாம் வேடிக்கையாகப் பேசும் திருத்தங்கல்வாசிகள், “எக்ஸு இப்ப சாமிகும்பிடப் போனாக்கூட எஸ்கார்டு இல்லாம போறதில்லைல...” என்று சொல்லிச் சிரிக்கிறார்கள்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்