

அதிமுக ஆட்சியில் சேகர் ரெட்டியாக விமர்சிக்கப்பட்டவர் இப்போது ஜெ.சேகராக மாறி முதல்வரிடம் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியதை நாடறியும். சேகர் ரெட்டி முதல்வரைச் சந்தித்ததற்கு முந்தைய நாள் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யச் சென்றிருந்தாராம் அமைச்சர் கே.என்.நேரு. அப்போது அவருக்கான தரிசன ஏற்பாடுகளை செம்மையாக செய்து கொடுத்தவர் ரெட்டி காரு தானாம். அந்த சந்திப்பின் போது நேரு கொடுத்த யோசனைப்படி தான் முதல்வரை சந்தித்து நிவாரண நிதி கொடுக்க வந்தாராம் ஜெ.சேகர்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்