2 அமைச்சர்கள் உட்பட பதவியேற்காத 9 பேர் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்பு

2 அமைச்சர்கள் உட்பட பதவியேற்காத 9 பேர் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்பு

Published on

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அமைச்சர்கள் இருவர், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உட்பட பதவி ஏற்காத 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று முறைப்படி சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''1. குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்,

2. ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் மதிவேந்தன்,

3. விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,

4. கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு,

5. வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காந்திராஜன்,

6. அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா,

7. ஒரத்தநாடு சட்டப்பேரவை உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம்,

8. செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி,

9. அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடாசலம்

ஆகிய 9 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று முறைப்படி சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின், முன்னவர் துரைமுருகன், அரசு கொறடா உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in