

புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் ஆய்வு மேற்கொண்டார். இருக்கைகள் அமைப்பது தொடங்கி பல விஷயங்கள் தொடர்பாக சட்டப்பேரவைச் செயலர் முனிசாமியுடன் ஆலோசித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக என்ஆர்காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் ஓரிரு நாளில் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் நேற்று சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தார். அவரை சட்டப்பேரவை செயலர் முனிசாமி வரவேற்றார். தொடர்ந்து சபாநாயகர் கூட்டரங்கிற்கு சென்று ஆய்வு செய்தார். கரோனா தடுப்பு முறைகள், சட்டப்பேரவையில் இருக்கைகள் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் பேரவை செயலரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து சில ஆலோசனைகள் கூறிய சபாநாயகர் அங்கிருந்து கிளம்பி சென்றார். இதனால் ஓரிரு நாட்களில் சட்டப்பேரவை கூட வாய்ப்புள்ளது.