Published : 07 Dec 2015 08:54 AM
Last Updated : 07 Dec 2015 08:54 AM

வெள்ள நிவாரணப் பணிகளில் அரசை குறை கூற விரும்பவில்லை: திமுக தலைவர் கருணாநிதி கருத்து

வெள்ள நிவாரணப் பணிகளில் தற்போது அரசை குறைகூற விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக திமுகவினரும் பொதுமக்களும் நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று திமுக தொண்டர்களும் பொதுமக்களும் தங்களால் இயன்ற பொருட்களை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத் துக்கு அனுப்பிக் கொண்டுள்ளனர். நேற்று காலை அண்ணா அறிவால யத்துக்கு வந்த கருணாநிதி, நிவா ரணப் பொருட்களை பார்வையிட்டு அவற்றை பாதிக்கப்பட்ட பகுதி களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அப்போது நிருபர்களின் கேள்வி களுக்கு கருணாநிதி அளித்த பதில்கள்:

நீங்கள் விடுத்த வேண்டுகோள் படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த பொருட்கள் எல்லாம் வந்திருப்பது பற்றி?

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்ய தமிழ் மக்களும், கட்சித் தொண்டர் களும் தங்களால் இயன்ற அளவுக்கு அவரவர் மாவட்டங் களில் இருந்தும், பகுதிகளில் இருந்தும் தேவையான நிவாரணப் பொருட்களையும் பண்டங்களை யும் வழங்கிக்கொண்டே இருக் கிறார்கள். தக்க நேரத்தில் அவர்கள் செய்துள்ள இந்த உதவி களை என்னால் மறக்கவே முடியாது. இந்த உதவிகளைச் செய்த அனைவருக்கும் திமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் நிவாரண நட வடிக்கைகள் போதுமானதா?

இந்த நேரத்தில் அரசை குறை கூற விரும்பவில்லை. ஆரம்பத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை களை எடுக்காமல் விட்டுவிட்டனர். தாமதமாக இப்போது ஓரளவு நடவடிக்கை எடுத்து, பாதிக்கப் பட்டவர்களை எந்த அளவுக்கு திருப்திப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு திருப்திப்படுத்து கின்றனர். அதனால்தான் அரசை நம்பாமல் மனிதாபிமானத்தோடு இப்படிப்பட்ட முயற்சிகளிலே இறங்கி இருக்கிறோம். இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

வழக்கறிஞர் அணி அறிவிப்பு

திமுக வழக்கறிஞர் அணித் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பெய்த கடும் மழையின் விளைவாக பல்லாயிரக் கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பல பொருட்கள் சேத மடைந்துள்ளன.

மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் கள், குடும்ப அட்டைகள், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம் உள் ளிட்ட முக்கிய ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டும், சேதமடைந்தும் உள்ளன.

இந்த முக்கிய ஆவணங்களை இழந்து தவித்து வரும் மாணவர் களுக்கும், பொது மக்களுக்கும் உதவும் வகையில் திமுக வழக் கறிஞர் அணியின் சார்பில் உரிய துறையிடம் அந்த ஆவணங்களின் நகல்களை பெற்றுத் தருவதற்கான தகுந்த உதவிகளை இலவசமாக செய்து தருவதற்கு தயாராக உள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் மூல மாகவோ அல்லது திமுக தலைமைக் கழக அலுவலகத்தை 044-24320270 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் வழக்கறிஞர் கள் உரிய உதவிகளை செய் வார்கள்.

இவ்வாறு ஆர்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்

சென்னை ராயபுரம், திருவொற்றியூர் மண்டலங்களில் 55, 7-வது வார்டுகளுக்கு உட்பட்ட ஏழுகிணறு உருது பள்ளி காக்ஸ் தெரு, அண்ணாமலை 3-வது தெரு உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி சார்பில் குப்பை அள்ளும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x