‘யாஸ்’ புயல் காரணமாக இன்று முதல் 26-ம் தேதி வரை 32 சிறப்பு ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

‘யாஸ்’ புயல் காரணமாக இன்று முதல் 26-ம் தேதி வரை 32 சிறப்பு ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
Updated on
1 min read

‘யாஸ்’ புயல் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல்வேறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தெற்கு ரயில்வேயில் மொத்தம் 32 சிறப்பு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. 23-ம் தேதி நாகர்
கோவில் - கொல்கத்தா ஷாலிமார் (02659), 26-ம் தேதி ஷாலிமார் - நாகர்கோவில் (02660), 24-ம் தேதி ஹவுரா - கன்னியாகுமரி (02665), எர்ணாகுளம் - பாட்னா (02643), தின்சுகியா - தாம்பரம் (05930) ஆகியரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் - ஹவுரா (02822/02821) சிறப்புரயில்கள் 24-ம் தேதி முதல் 26-ம்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

25-ம் தேதி சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி (02808), எர்ணாகுளம் - பாட்னா (02643), ஹவுரா - திருச்சி (02664) உட்பட பல்வேறு தடங்களில் மொத்தம் 32 சிறப்பு ரயில்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in