Published : 23 May 2021 06:11 AM
Last Updated : 23 May 2021 06:11 AM

கருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை போரூர் - வடபழனி சந்திப்பில் உள்ள வெங்கடேஸ்வரா மகாலில் 70 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலை திறந்து வைத்தார். இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ
பதி துறை இயக்குநர் எஸ்.கணேஷ்,மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி போன்ற மருத்துவ முறைகள் மூலம் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, 15 நாட்களில் 35 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் 3,623 படுக்கைகள் உள்ளன. தொற்றின் 2-வது அலையில் சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் இதுவரை 7,236 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 1,892 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 36-வது சித்த மருத்துவ சிகிச்சை மையம் 70 படுக்கைகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளது.

சித்த மருத்துவ மையங்களில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு உள் மருந்து, வெளி மருந்து மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. 100 சித்த மருத்துவ மையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து பகுதிகளிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்
பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களைவிட கோவை மாவட்டத்தில் குறைவான அளவில் தடுப்பூசி போடப்படுவதாக தவறான செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு 78.49 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. 71.52 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு
உள்ளன. 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கரோனா தொற்று முதல் அலையில் 6 சதவீதம் தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. ஆனால், கரோனா தொற்று 2-வது அலையில் தடுப்பூசிகள் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 5,04,370 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகமான தடுப்
பூசிகள் கோவை மாவட்டத்தில் தான் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. உண்மை இப்படி இருக்க, தவறான தகவல் பரப்பப்படுகிறது.

மத்திய அரசு இதுவரை குஜராத் மாநிலத்துக்கு குஜராத் 16.4 சதவீத தடுப்பூசிகளை கொடுத்துள்ளது. ஆனால், தமிழகத்துக்கு 6.3 சதவீத தடுப்பூசிகளை மட்டும் வழங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கு எவ்வளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்ற விவரங்
கள் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அனைவரும் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். இந்த அரசு வெளிப்
படையாக செயல்பட்டு வருகிறது.

திருப்பூர், திருச்சி, சென்னையில் 19 முதல் 44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வரு
கிறது. படிப்படியாக அனைத்துமாவட்டங்களிலும் தொடங்கப்படும். ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி மையங்கள் செயல்படும்.

கருப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோய்க்கு முக்கிய மருந்தான ஆம்ஃபோடெரிசின்-பி மருந்தின் 140 குப்பிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது.

வட மாநிலங்களில் பரவி வரும் வெள்ளை பூஞ்சை நோய்பற்றியும், மருத்துவ முறைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மெட் ஆல் என்ற தனியார் ஆய்வகத்துக்கான கரோனா பரிசோதனை செய்யும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல் எந்த தனியார் ஆய்வகம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக சூரப்பட்டு வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 84 படுக்கைகள் வசதியுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம், 86 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம், 95 படுக்கைகளுடன் கூடிய கரோனா பாதுகாப்பு மையத்தையும் மஞ்சம்பாக்கம் நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

தஞ்சை, கோவையில் 8 பேர் தஞ்சாவூர் மற்றும் கோவையில் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் ம.கோவிந்தராவ் செய்தியாளர்களிடம் கூறியது:
திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்போர், அரசின் விதிமுறைகளை பின்பற்றாததால்தான் கரோனா தொற்றுஅதிகம் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் கரோனா வழிகாட்டுநெறிமுறைகளை அவசியம் பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தற்போது 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
கோவையில் கரோனா தொற்றால் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் குறையாத நிலையில், தொற்று பாதித்தவர்களில் சிலருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறும்போது, ‘‘கோவையில் இதுவரை 6 பேருக்கு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை’’ என்றார்.

திருச்சியில் 6 பேருக்கு அறிகுறி

இதேபோல, திருச்சி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்புஅறிகுறிகளுடன் 6 பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. அதேவேளையில், யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x