

இண்டேன் நிறுவனம் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் சென்னையில் 5 இடங்களில் நடத்தப்படுகின்றன.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, இண்டேன் நிறுவனம் சார்பில் இன்றும், நாளையும் சென்னையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி, மணலி புதுநகரில் சுபம் கேஸ் ஏஜென்சி, தாம்பரம் கிழக்கில் ஸ்ரீ செல்லா கேஸ் ஏஜென்சி, தாம்பரம் மேற்கில் பட்டம்மாள் கேஸ் ஏஜென்சி, கொரட்டூர் வடக்கில் பிரசன்னா கேஸ், சோழிங்கநல்லூரில் ஸ்ரீ அம்பிராம் இண்டேன் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் தங்கள் காலி சிலிண்டரை எடுத்து வந்து கொடுத்து தங்களுடைய நுகர்வோர் எண், விநியோகஸ்தர் பெயரை கூறி புதிய சிலிண்டரை வாங்கிக் கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு ஸ்ரீனிவாசன் (9445915527), ரவி (9445070295) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளது.