

மதுரை ரிசர்வ் லைன் ஆயுதப் படை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் நாகசாமி (45). இவர் ஆயுதப்படை காவல் பிரிவில் ஓட்டுநராகப் பணிபுரிந்தார். இவரது மனைவி கலாவதி (40). இவர்களின் மகள் கீர்த்தனா (14), மகன் கிருஷ் (10).
மதுப் பழக்கத்துக்கு அடிமை யான நாகசாமி வீட்டுக்குச் சரியாக வராமலும், குடும்பத்துக்கு பணம் கொடுக்காமலும் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் நாகசாமி, வழக்கம்போல மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கடும் அதிருப்தியடைந்த கலாவதி அவரைக் கண்டித்துள்ளார். ஆத் திரமடைந்த அவர் மனைவியைத் தாக்கியுள்ளார்.
மனமுடைந்த கலாவதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குழந்தைகள் மற்றும் தன் மீது ஊற்றினார். மகன் கிருஷ் தப்பி வெளியே ஓடிவிட்டார். அதனால் கலாவதி தன் மீதும், மகள் மீதும் தீ வைத்துக் கொண் டார். கண் முன்னே மனைவி, மகள் தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி யடைந்த நாகசாமி இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் நாகசாமி, அவரது மனைவி, மகள் ஆகிய மூவரும் படுகாய மடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் மூவரை யும் மீட்டு சிகிச்சைக் காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு கலாவதி சிகிச்சை பலன ளிக்காமல் இறந்தார். நேற்று காலை நாகசாமியும், மகள் கீர்த் தனாவும் இறந்தனர். இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர். தந்தை, தாய், சகோதரி இறந்துவிட்டதால் போலீஸ்காரரின் மகன் கிருஷ் ஆதரவின்றி தவித்து வருகிறார். இறந்த மூவரின் உடல்களும் சொந்த ஊரான டி.கல்லுப்பட்டி அருகே சோளப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது.