

புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக தேவையான நோய் தடுப்புமருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தேவையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் வழக்கறிஞர் மாலா ஆஜராகி, புதுச்சேரியில் தற்போதைய சூழலில் கரோனா நோயாளிக
ளுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவை போதுமான அளவுக்கு உள்ளன. ஆனால் நோயாளிகளின் எண்
ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் இதன் தேவை அதிகரிக்கும்போது பற்றாக்குறை ஏற்படும்.
புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் 44 மெட்ரிக் டன் தமிழகத்துக்கு வழங்கப்படுகிறது. புதுச்சேரிக்கு 28 மெட்ரிக்
டன் ஆக்சிஜன்தான் ஒதுக்கப்படுகிறது.
புதுச்சேரிக்கு அருகே உள்ள தமிழக மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வருவதால் வரும் வாரங்களில் புதுச்சேரியின் ஆக்சிஜன் தேவை 65 டன்னாக உயரும். எனவே ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அம்மாநிலத்துக்கு என்ன தேவை என்பது குறித்து மத்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு அதை பரிசீலித்து உரிய ஒதுக்கீட்டை புதுச்சேரிக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதேநேரம் புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அதிகாரிகள் உடனடி
யாக முழுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (மே 24) தள்ளி வைத்தனர்.