Published : 23 May 2021 05:53 AM
Last Updated : 23 May 2021 05:53 AM

ஸ்டெர்லைட்டில் 50.38 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கடந்த 3 நாட்களில் 50.38 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக் கிடந்த ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் சீரமைக்கப்பட்டு, கடந்த 12-ம் தேதி இரவு முதல் உற்பத்தி தொடங்கியது. இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 6 நாட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மீண்டும் கடந்த 19-ம் தேதி திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. 19-ம் தேதி உற்பத்தியான ஆக்சிஜனில் 6.34 டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 5.24 டன் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து 20-ம் தேதி காலை 7.74 டன் திரவ ஆக்சிஜன் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கும், அன்று இரவு 9 டன் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல், 21-ம்தேதி 3.64 டன் திரவ ஆக்சிஜன் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கும், 9.14 டன் ஆக்சிஜன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறுக்கு பின்னர் உற்பத்தி தொடங்கிய 3 நாட்களில் (21-ம் தேதி வரை) 50.38 டன் திரவ ஆக்சிஜன் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x