

அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, கட்சிகளில் அதிருப்தியாளர் கள் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய 22 விதமான பட்டியலை, கிராம அளவில் அனுப்ப திமுக தலைமை உத்தரவிட்டதன்பேரில் தொண்டர்கள் புள்ளிவிவரங்களை தீவிரமாகச் சேகரித்து வருகின் றனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதில் பிரதான கட்சிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. தங்கள் கட்சியை வெற்றி பெற வைக்க, குக்கிராம அளவில் கிடைக்கும் புள்ளிவிவரங்களை அடிப்படையாக வைத்து, அதற் கேற்ப தேர்தல் பணியாற்ற கட்சி கள் திட்டமிட்டுள்ளன. இந்த விவ ரங்களைச் சேகரிப்பதில் திமுக மிகவும் தீவிரம் காட்டி வருகிறது.
இக்கட்சி சார்பில், ஏற்கெனவே வாக்குச்சாவடி வாரியாக 15 பேர் வீதம் தொகுதிக்கு 3,500 பேர் வரை இடம்பெற்றுள்ள பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கமிட்டியில் இடம்பெற்றுள்ள உறுப் பினர்கள் ஒவ்வொருவருக்கும், தேர்தல் பணிக்காக 12 முதல் 20 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஏற்கெனவே 2 முறை குடும்பத் தலைவர்களை சந்தித்து வீடுவாரியாக செல்போன் எண்கள் உட்பட சில விவரங்களைச் சேக ரித்து கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டனர்.
தற்போது 22 விதமான புள்ளி விவரங்களை அனுப்பும்படி திமுக கட்சித் தலைமை உத்தரவிட்டுள் ளது. வாக்குச்சாவடி வாரியாக வசிக்கும் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், வணிகர், வழக்கறி ஞர், மருத்துவர், சங்க நிர்வாகிகள், 50 வாக்குகளை ஈர்க்கும் வகையில் செல்வாக்குள்ளவர், உள்ளாட்சி உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்கள் பற்றிய விவரங் களைக் கேட்டுள்ளது.
மேலும் அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக கட்சிகளில் தீவிர மாகச் செயல்படுபவர்கள், உட்கட்சி பிரச்சினையால் ஒதுங்கியிருப் பவர்கள் குறித்த விவரங்களையும் குறிப்பெடுத்து தனித்தனியாக 22 விதமான படிவங்களில் சேக ரித்து அனுப்பும்படி உத்தரவிடப் பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் மூலம் இந்த படிவங்கள் நகர், ஒன்றிய, கிளைச் செயலாளர்கள் வழியாக வாக்குச்சாவடி பொறுப் புக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
புள்ளிவிவரங்கள் சேகரிப்பு குறித்து, கட்சியின் நீண்டகால உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: இதுவரை தேர்தல் அறிவிப்புக்குப் பின்னரே, தொண்டர்களைத் தேடி கட்சி நிர்வாகிகள் வருவர். தற்போது நிலைமை மாறி விட்டது என்றார்.