நிலோபர் கபீல் திமுகவில் இணைய திட்டமா? விரைந்து நடவடிக்கை எடுக்க அதிமுக நிர்வாகி டிஜிபிக்கு கடிதம்

நிலோபர் கபீல் திமுகவில் இணைய திட்டமா? விரைந்து நடவடிக்கை எடுக்க அதிமுக நிர்வாகி டிஜிபிக்கு கடிதம்
Updated on
1 min read

அதிமுகவில் இருந்து நீக்கட்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் தன் மீது சுமந்தப்பட்ட பண மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதால் விரைந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஐபிக்கு வாணியம்பாடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று அமைச்சரான நிலோபர்கபீல் மீது அவரது தனி உதவியாளர் பிரகாசம் என்பவர் பண மோசடி குறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அமைச்சர் நிலோபர்கபீல் தான் பதவி வகித்த கடந்த 5 ஆண்டுகளில் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 கோடி வரை மோசடி செய்திருப்பதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட புகாரில் இருந்து தப்பித்துக்கொள்ள முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல், திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார்.

இதற்கான திருப்பத்தூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை சட்டப்பேரவை உறுப்பினருமான தேவராஜ் மற்றும் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரை அவர் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையும் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஆளும்கட்சியாக உள்ள திமுகவில் நிலோபர்கபீல் இணைந்து விட்டால் அவர் குற்ற நடவடிக்கையில் இருந்து எளிதாக தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்து திமுகவில் இணைய நாள் கேட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

எனவே, ஏழை, எளிய மக்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 கோடி வரை மோசடி செய்து பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்துள்ள முன்னாள் அமைச்சர் நிலோபர்கபீல் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in