கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி புகாரை விசாரிக்க முடிவு: சங்கத் தலைவர்கள், செயலர்கள் கலக்கம்

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி புகாரை விசாரிக்க முடிவு: சங்கத் தலைவர்கள், செயலர்கள் கலக்கம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் முன்தேதியிட்டு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்த புகாரை விசாரிக்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் சங்கத் தலைவர்கள், செயலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியின்போது கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதேபோல் பிப்.26-ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், 6 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

ஆனால் அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் 5 பவுன் வரை தள்ளுபடி செய்யப்படுமா? (அ) 6 பவுன் வரை தள்ளுபடி செய்யப்படுமா? என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இதற்கிடையில் ஏற்கனவே அதிமுக அரசு தள்ளுபடி செய்த பயிர்க் கடனிலேயே பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த 2021 ஜன.31-ம் தேதி வரை வழங்கப்பட்ட பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் மாநிலம் முழுவதும் பல சங்கங்களில் ஜன.31-க்கு பிறகு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் முன்தேதியிட்டு பயிர்க்கடனாக மாற்றப்பட்டுள்ளன.

அதேபோல் பயிர்க்கடன் வழங்காத காலங்களில் வழங்கப்பட்ட பிற கடன்களும் பயிர்கடன்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த புகார்களை விசாரித்த பிறகே நகைகக்கடன்கள் தள்ளுபடி செய்ய கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், செயலாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in