

மழையால் சேதம் அடைந்த பகுதிகளில் 106 கி.மீ. தூரத் துக்கு புதிய மின்கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது.
இதனால், சீரான மின் விநியோகம் கிடைக்கும் பொருட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் மின் பகிர்மான பெட்டிகளை (பில்லர் பாக்ஸ்) உயர்த்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, சென்னையில் உள்ள நந்தம்பாக்கம், மைலாப்பூர், தி.நகர், அபிராம புரம், சாந்தோம், பெரம்பூர், எழும்பூர், அண்ணாநகர், புளியந்தோப்பு, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 334 மின்பகிர்மான பெட்டிகள் தரை மட்டத்தில் இருந்து 3 அடி உயரத்துக்கு உயர்த்தப்பட் டுள்ளன.
மேலும், மாதவரம், பெரியார்நகர், தேவி நகர், வேளச்சேரி, ராமகிருஷ்ணா நகர், பள்ளிக்கரணை, கந்தன்சாவடி ஆகிய இடங்களில் 106 கி.மீட்டருக்கு புதிய மின்கம்பிகள் மாற்றப்பட்டுள்ளன.
குழு அமைப்பு
மேலும், திருச்சி, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய ஊர்களில் தலைமை பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து போர்க் கால அடிப்படையில் மின் கம்பிகளை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.