வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பாதிப்பு: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்

வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பாதிப்பு: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் சேதம்
Updated on
1 min read

சென்னை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று மேற்கு மாம்பலம். இந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

மேற்கு மாம்பலத்தில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் ஒவ்வொரு வீட்டிலும் தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. சில வீடுகளில் ரூ.10 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நீரில் மூழ்கியதால் கார்கள், பைக்குகள் பழுதாகியுள்ளன.

மழை நின்று 2 நாட்களுக்குமேல் ஆகியும் ஈஸ்வரன் கோயில் தெரு, பாபு ராஜேந்திர பிரசாத் தெரு, குப்பையா தெரு, காசி விஸ்வநாதர் கோயில் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை.

மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியிருப்பதால் தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துவிட்டதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்ட நிலையில், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகள், கழிவுகள் தேங்கியுள்ளன. அவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது: மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளதால் இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை. கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதிக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in