

கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்றிரவு மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் வரவேற்றனர்.
மதுரையில் கரோனா பரவல் தடுப்பு குறித்து ஆட்சி யர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மேலும் தோப்பூரில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தையும் திறந்து வைக்கிறார்.
இதற்காக முதல்வர் மு.க.ஸ்டா லின் கோவையில் இருந்து தனி விமானத்தில் நேற்று இரவு 7.35 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் முதல்வரை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் சுவெங்கடேசன் எம்பி., மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணை யாளர் எஸ்.விசாகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட முதல்வர் அரசு சுற்றுலா மாளிகைக்கு இரவு 8.10 மணி அளவில் வந்தார். அங்கு அவர் போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக எம்எல்ஏ.க்கள் முதல்வரை வரவேற்றனர்.
விமான நிலையம் முதல் சுற்றுலா மாளிகை வரை ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.