Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM

ஆதரவற்றோருக்கு ஒரு மாத ஊதியத்தில் அரிசி, மளிகை பொருள் வழங்கிய போலீஸ் தம்பதி: திண்டுக்கல் டி.ஐ.ஜி. முத்துச்சாமி பாராட்டு

அம்மையநாயக்கனூர் அருகே ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு தங்களது ஊதியத்தில் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கிய போலீஸ் தம்பதி.

திண்டுக்கல்

கொடைரோடு அருகே காவல் துறையில் பணிபுரியும் தம்பதி தங்களின் ஒரு மாத ஊதியத்தில் ஆதரவற்றோர், முதியோர் காப்பகத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்களை வாங்கி வழங்கினர். இந்தச் சேவையை திண்டுக்கல் டி.ஐ.ஜி பாராட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம் அம்மை யநாயக்கனூர் காவல் நிலையத் தில் தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் அன்பழகன். இவரது மனைவி செல்வரத்தினம் விளாம்பட்டி காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரி கிறார். சிறு சிறு உதவிகள் செய்துவரும் இவர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கரோனா பாதிப்பு, ஊரடங்கால் பாதிக் கப்பட்டோருக்கு செலவு செய்ய முன்வந்தனர். இதையடுத்து அம்மைய நாயக்கனூர் அருகே யுள்ள முதியோர் காப்பகம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தை கள் காப்பகத்துக்கு தங்களது ஊதியத்தில் இருந்து ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள், போர்வை உள்ளிட்டவற்றை வாங் கிச் சென்று வழங்கினர்.

காவலர் தம்பதியின் இந்தச் செயல் அனைவரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. தகவலறிந்த திண்டுக்கல் டிஐஜி.முத்துச்சாமி போலீஸ் மைக்கில், இவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பேசுகையில், காவல்துறையில் பணிபுரியும் அன்பழகன், செல்வரத்தினம் தம்பதியால் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்குப் பெருமை கிடைத்துள்ளது. அவர்களைவிட பெரிய பதவியில் இருக்கும் நான் இதுபோன்று செய்கிறேனா என்றால் இல்லை. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து முழுமனதுடன் உதவி செய்ததற்கு திண்டுக்கல் சரக காவல்துறை சார்பில் வணக்கங்கள். இருவருக் கும் வாழ்த்துகள்.

டிஎஸ்பிகள் அனைவரும் இந்த காவல் தம்பதியைத் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவியுங்கள், இது எனது உத்தரவு அல்ல, வேண்டுகோள், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x