

திருமணங்களுக்கு செல்வதற் கான இ-பதிவு பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு, மணமக்கள் அல்லது பெற்றோர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவித் துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவ லை கட்டுப்படுத்த கடந்த மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தளர்வுகளை பயன் படுத்தி அதிக அளவில் பொது மக்கள் வெளியில் சுற்றியதால், கடந்த 15-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்அமல் படுத்தப் பட்டன. அதன்படி, மாவட்டத்துக் குள்ளும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பாக திருமண நிகழ்வுகளுக்கு செல்ல வழங்கப்பட்ட இ-பதிவு முறையில் பலரும் தவறான தகவல்களை அளித்து பதிவு செய்ததை தொடர்ந்து, அதற்கான வசதிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பல்வேறு கட்டுப் பாடுகளுடன் அந்த வசதி மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
திருமணத்துக்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒரே பதிவி லேயே அனைத்து வாகனங்களுக் கும் இ-பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. திருமணத் தில் நேரடியாக சார்ந்துள்ள மணமகன், மணமகள், தாய், தந்தை ஆகியோரில் ஒருவர் மட்டுமே இப்பதிவை மேற்கொள்ளலாம். விண்ணப்பதாரர் பெயர் திருமண அழைப்பிதழில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ் வுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ, பெருந்தொற்று மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுக்கு 50 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவீட்டாரும் இணைந்து ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் அளிக்க வேண்டும் என்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கால் மணமக்களுக்கு தேவையான புதிய உடைகள், நகைகள் ஆகியவற்றை வாங்க முடியாத நிலையில், தற்போது அரசின் கட்டுப்பாடுகளால் உற வினர்களை அழைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளதால் மண மக்களின் பெற்றோர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.