Published : 20 May 2021 03:12 AM
Last Updated : 20 May 2021 03:12 AM

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடியாமல் கரோனா நோயாளிகள் அவதி: குறைந்தபட்ச படுக்கைகள் ஒதுக்கீட்டை உறுதி செய்யுமா அரசு?

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற இடம் கிடைக்காமல் கரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாவதை தவிர்க்க குறைந்தபட்ச படுக்கைகள் ஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு சிகிச்சை பெற அரசால்அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவ மனைகளின் விவரம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வெளியிடப்பட்டுள்ளன. அதில், “தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசுபொது மருத்துவமனை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை களை நேரடியாக அணுகி, சிகிச்சைபெற்றுக்கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.cmchistn.comஎன்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட் டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய நிலையிலேயே இருப்பதால், தனியார் மருத்துவமனைகளை நாடவேண்டிய நிலைக்கு ஏழை நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு இலவச சிகிச்சை பெறலாம் எனஅரசு அறிவித்திருந்தாலும் நோயாளிகள் காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதுதொடர்பாக கரோனா நோயாளிகளின் உறவினர்கள் சிலர்கூறும்போது, “காப்பீட்டு திட்டத்தின்கீழ் அனுமதிக்க வேண்டுமென்றாலும் முன்பணம் கட்ட வேண்டும்என சில தனியார் மருத்துவமனை களில் தெரிவிக்கின்றனர். கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டால் எந்த பதிலும் இல்லை.

தற்போது இளம் வயதினர் உட்பட பலருக்கு, சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தேவைப்படுகின்றன. ஆனால்,காப்பீட்டு திட்டத்தின்கீழ் எந்த மருத்துவமனையில் இடம் உள்ளதுஎன்பதை தேடி அலைய வேண்டியுள்ளது. எங்கு தொடர்பு கொண்டாலும் படுக்கை இல்லை என்றே பதில் வருகிறது.

எனவே, காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கரோனா நோயாளிகள் பயன்பெற ஏதுவாக, மொத்தமுள்ள படுக்கைகளில் 25 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் எனஅனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும். அதில்,எத்தனை படுக்கைகள் நிரம்பியுள் ளன? எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன? என்பதை தினந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மூலம் வெளிப் படையாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x