‘மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்’

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வேலூர் மாவட்ட மருத்துவ மனைகளில் மருத்துவம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள தகுதியுள்ள மருத்துவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-ம் அலை அதிகரித்துள்ளது. கரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக் கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த பணிகளை மேற்கொள்ள தகுதி வாய்ந்த மருத்துவர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். எனவே, வேலூர் மாவட்டத்தில் மருத்துவர் பணிக்கு தகுதி வாய்ந்த எம்பிபிஎஸ்/எம்டி கல்வித்தகுதி உடைய மருத்துவர்கள் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மாவட்ட ஆட்சியரகம், சத்துவாச்சாரி, வேலூர் என்ற மேற்கண்ட அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள மருத்துவருக்கு மாத ஊதியமாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். தகுதி வாய்ந்த மருத்துவர்கள் தங்களது பயோடேட்டாவை மாவட்ட ஆட்சித் தலைவரின் வாட்ஸ் -அப் எண்ணான 94981-35000 என்ற எண் ணுக்கும் அனுப்பி வைக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in