2-வது திருமணம் செய்து கொண்டாலும் முதல் கணவரின் குழந்தையை பராமரிக்கும் உரிமை தாய்க்கு உள்ளது: உயர் நீதிமன்றம்

2-வது திருமணம் செய்து கொண்டாலும் முதல் கணவரின் குழந்தையை பராமரிக்கும் உரிமை தாய்க்கு உள்ளது: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

கணவர் இறந்த பின்பு 2-வது திருமணம் செய்துகொண்டாலும், முதல் கணவரின் குழந்தையைப் பராமரிக்கும் உரிமை தாய்க்கு உள்ளது என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித் துள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுபா என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:

எனது முதல் கணவர் இறந்த பின்பு நான் என் மகளுடன் வசித்தேன். சிறிது காலத்துக்குப் பிறகு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டேன்.

இந்நிலையில், எனது குழந் தையை கடந்த பிப்ரவரி மாதம், முதல் கணவரின் தாய் காளியம் மாள் கடத்திச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து நான் அளித்த புகாரின்பேரில், நாகை மாவட் டம், மணல்மேடு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விட்டு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, எனது மகளை கண்டுபிடித்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உத்தர விட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு இம்மனுவை விசாரித்து, “முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில், சட்டப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் உரிமை மனுதாரருக்கு உள்ளது. மனுதாரர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரது முதல் கணவரின் குழந்தையைப் பரா மரிக்கும் உரிமை இல்லை என்று கூறிவிட முடியாது. அதனால், மனு தாரரின் முதல் கணவரின் தாயார் காளியம்மாள் மனுதாரரின் குழந் தையை ஒப்படைக்க வேண்டும். அதற்குத் தேவையான பாதுகாப் பினை நாகப்பட்டினம் காவல் துறையினர் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in