காணாமல்போன மகனை தாயுடன் சேர்த்த கரோனா: மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்

காணாமல் போன சிறுவனின் தாயும் சகோதரர் விக்னேஸ்வரன்.
காணாமல் போன சிறுவனின் தாயும் சகோதரர் விக்னேஸ்வரன்.
Updated on
1 min read

கரோனா உயிர்கள், உறவுகளைப் பிரிக்கும் துக்கச் செய்திகளுக்கு மத்தியில், காணாமல் போன சிறுவன தனது பெற்ற்றோருடன் இணையவும் கரோனா காரணமாக இருந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமான மதுரைச் சிறுவன் கோவையில் கரோனா தொற்றுக்கு ஆளானதால் மகன் குறித்த தகவல் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது.

மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி வீரம்மாள். இவர்களின் 15 வயது மகன், ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனார்.

அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், சிறுவனை கோவை பேருந்து நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினர் அண்மையில் மீட்டனர். மருத்துவப் பரிசோதனையில் சிறுவனுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால், அச்சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக மதுரையிலுள்ள சிறுவனின் பெற்றொருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மகன் கிடைத்த மகிழ்ச்சியில், கரோனா பாதித்து கோவையில் சிகிச்சையில் இருக்கும் மகனை உடனிருந்து கவனிக்க வீரம்மாள் ஆசைப்பட்டார்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் கோவைக்கு உடனடியாக புறப்பட்டுச் செல்ல முடியாமல் தவித்த வீரம்மாள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் உதவி கோரினார்.

வீரம்மாள், கோவைக்குச் செல்ல உரிய ஏற்பாடுகளைச் செய்ய செஞ்சிலுவை சங்கத்தை ஆட்சியர் கேட்டுக் கொண்டார். உடனே செஞ்சிலுவைச் சங்க செயலர் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் ராஜ்குமார், முத்துக்குமார், ராஜு, தினேஷ் ஆகியோர் வீரம்மாளை சந்தித்துப் பேசினர்.

அப்போது அவர், காணாமல்போன மகனைத் தேடிவந்த நிலையில் மகன் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் மகன் கரோனா தொற்றால் அவதிப்படுவது நினைத்து வேதனையில் உள்ளோம். கோவைக்குச் சென்று மகனை உடனிருந்து கவனிக்க வேண்டும்.ஆனால் ஊரடங்கால் அதற்கு வழியில்லாமல் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து செஞ்சிலுவை சங்கத்தினர் வீரம்மாளையும், அவரது மூத்த மகன் விக்னேஸ்வரனையும் கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in