

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்திடம் தோற்றுப் போன திமுக முன்னாள் எம்எல்ஏ-வான ராமச்சந்திரன், தனது தோல்விக்கான காரணம் குறித்து ஸ்டாலினிடம் விரிவான கடிதம் ஒன்றை அளித்திருக்கிறாராம். அதில், கடந்த முறை அமமுக இல்லாதபோதே ஒரத்தநாட்டில் உதயசூரியன் உதித்தது. இந்த முறை அமமுக வலுவான வேட்பாளரை நிறுத்தி கணிசமான வாக்குகளைப் பிரித்தும் நாம் தோற்றுப் போயிருக்கிறோம். இதற்குக் காரணம் திமுகவில் உள்ள சில துரோகிகள் தான். கட்சியின் முக்கியப் பொறுப்பிலுள்ள சிலர் வைத்திலிங்கம் கொடுத்த தலா 10 லட்ச ரூபாய்க்கு விலை போயிருக்கிறார்கள். அவர்களால் தான் நாம் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ள ராமச்சந்திரன், சோரம் போன ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சிலரது பெயர்களையும் குறிப்பிட்டு, இவர்கள் மீதெல்லாம் தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறாராம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்