Published : 15 Dec 2015 08:20 AM
Last Updated : 15 Dec 2015 08:20 AM

மழையால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்களின் பிரீமியத்தை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்: எல்ஐசி முகவர்கள் வலியுறுத்தல்

மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களின் பாலிசிகளுக் கான பிரீமியத்தை முழுமையாக எல்ஐசி தள்ளுபடி செய்ய வேண்டும்’ என எல்ஐசி முகவர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் தாம்பரத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.கலாம் தலைமைத் தாங்கினார். பொதுச் செயலாளர் சோ.சுத்தானந்தம், பொருளாளர் கே.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகம் முழுவதும் அனைத்து பாலிசிகளுக்கும் பிரீமியம் கட்டுவதில் ஏற்படும் காலதாமதத்தைக் கணக்கில் கொள்ளாமல் பாலிசி காலாவதி ஆகிவிடாமல் கால நீட்டிப்பு வழங்கியும், வட்டியில் விலக்கு அளித்தும் ஆணை வெளியிட்ட எல்ஐசி நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களுடைய பாலிசிகளுக்கான பிரீமியத்தை முழுமையாக எல்ஐசி தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்ஐசி முகவர் களுக்கு வணிகம் செய்ய இயலாமல் தவித்து வருவதால் அவர்கள் குடும்ப பராமரிப்புக்காக வெள்ள நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கவும், இந்த ஆண்டு குறைந்தபட்ச வணிகத்தில் விலக்கு அளிக்கவும் எல்ஐசி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் ரூ.8 ஆயிரத்துக்குள் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் முகவர் கள் அவதிப்படுகிறார்கள். அவர்க ளுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியமாக வழங்கி ஆணைப் பிறப்பிக்க மத்திய அரசையும், எல்ஐசி நிர்வாகத் தையும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x