‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம்' - மனுக்கள் மீது வீடுவீடாக அதிகாரிகள் விசாரணை

முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த காமயக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த  மனுதாரர் வீட்டில் விசாரணை நடத்திய அதிகாரிகள்.
முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த காமயக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மனுதாரர் வீட்டில் விசாரணை நடத்திய அதிகாரிகள்.
Updated on
1 min read

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தை அறிவித்தார்.

இதன்படி மக்களிடம் மனுக்களைப் பெற்ற அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் 100 நாட்களில் அம்மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்றும் அறிவித்தார். தற்போது அவர் தமிழக முதல்வரானதை அடுத்து, தேனி மாவட்டத்தில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்று வரு கிறது.

கம்பம் பகுதிகளில் கோட் டாட்சியர் நா.சக்திவேல் தலை மையிலான குழுவினர் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த காமயக்கவுண்டன்பட்டி பேரூ ராட்சி பகுதியைச் சேர்ந்த மனுதாரர்களின் வீடுகளுக்குச் சென்று இக்குழுவினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விபத்துக் காப்பீடு, இலவச வீட்டுமனை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட மனுக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

தகுதியுடைய மனுதாரர் களுக்கு உதவி கிடைக்க பரிந் துரை செய்யப்படும் என்று அதி காரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து கம்பத்தில் உள்ள உழவர்சந்தை, வர்த்தக நிறுவனங்கள், உணவகங் கள் போன்றவற்றில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படு கிறதா என்று கோட்டாட்சியர் நா.சக்திவேல் ஆய்வு செய்தார்.

பின்பு க.புதுப்பட்டியில் கரோனா பாதித்த குடும்பத்தினரின் வீட்டுக்குச் சென்று அவர்களின் தேவைகள் கேட்டறியப்பட்டது.

உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி, வருவாய் ஆய் வாளர் ஹரி.செந்தில்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in