Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM

தேவகோட்டையில் முன்னாள் ராணுவ வீரர் மனைவி, 2 மகள்கள் மர்ம மரணம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் முன்னாள் ராணுவ வீரர் மனைவி, 2 மகள்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

தேவகோட்டை அழகாபுரி நகர் தேனம்மை ஊருணி தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமலிங்கம். இவர் 5 ஆண்டு களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். இந்நிலையில், அவரது மனைவி செல்வி ஷோபனா (50), மகள்கள் அபிராமி (24), சிவானி (20) ஆகி யோர் வசித்து வந்தனர்.

அபிராமி பிஎஸ்சி படித்துள்ளார். சிவானி மதுரை தனியார் பொறி யியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தார்.

கரோனா ஊரடங்கால் மூவரும் வீட்டிலேயே இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை வீடு திறக்காத நிலையில், அருகேயுள்ள உறவினர்கள் சந்தேகமடைந்து வீட்டுக்குள் பார்த்தபோது மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் தாயார் செல்வி ஷோபனாவும், இளைய மகள் சிவானியும் சேலையில் தூக்கிட் டும், மூத்த மகள் அபிராமி கட்டில் அருகே தலையில் அடிபட்டு ரத்தக் காயத்துடனும் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து தேவகோட்டை டிஎஸ்பி சபாபதி, இன்ஸ்பெக்டர் தேவிஉமா ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசா ரிக்கின்றனர். மூவர் இறப்பில் சந்தேகம் எழுந்ததை அடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித் தனர்.

போலீஸார் கூறியதாவது: ராம லிங்கம் இறந்த பிறகு 3 பேரும் அருகே வசிப்பவர்களிடம் சரி யாகப் பேசுவதில்லை. தற்போது ஊரடங்கு என்பதால், வீட்டை விட்டு யாரும் வெளியே வருவ தில்லை. தினமும் காலையில் செல்விஷோபனா மட்டும் வீட்டு வாசலில் கோலமிட்டு வந்தார். வழக்கம்போல நேற்று கோலமிடாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சென்று பார்த்துள்ளனர். மேலும் அபிராமி தலையில் அடிபட்டு இறந்தது. மற்ற இருவரும் தூக்கிட்டு இறந்ததற்கு முன்பே நடந்துள்ளது தெரிய வந்தது. மூவரின் மர்ம மரணத்தில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என தீவிர விசா ரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x