கி.ரா.வின் இழப்பு தமிழ் மட்டுமல்ல, இந்திய இலக்கிய உலகிலும் ஈடு செய்ய முடியாதது: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல்

கி.ரா.வின் இழப்பு தமிழ் மட்டுமல்ல, இந்திய இலக்கிய உலகிலும் ஈடு செய்ய முடியாதது: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல்
Updated on
1 min read

எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு மட்டுமல்ல, இந்திய இலக்கிய உலகிலும் ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ரங்கசாமி கரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளதால் அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்தவர் கி.ராஜநாராயணன். இந்திய நாட்டின் தெற்கு கடைக்கோடியில் இடைசெவல் கிராமத்தில் இருந்து வந்து தனது எழுத்து ஆளுமையாலும், கதை சொல்லும் தனித்த பாங்கினாலும் இந்தியாவில் புகழ்மிகு எழுத்து ஆளுமையாக உயர்ந்தவர். கரிசல் இலக்கியத் தந்தை எனப் போற்றப்படும் அவர், புதுச்சேரி மீதும், புதுச்சேரி இலக்கிய ஆர்வலர்கள் மீதும் மாறாத பற்றும் அன்பும் கொண்டவர். இலக்கியப் பாதையில் புதிய வெளிச்சத்தைக் காட்டிய விடிவெள்ளியை இந்திய இலக்கிய வானம் இழந்துவிட்டது.

அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு மட்டுமல்ல, இந்திய இலக்கிய உலகிலும் ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in