ஆக்சிஜன், மருந்துப் பொருள் தேவை; பெரு நகரங்கள் முதல் கிராமம் வரை முழுமையாக கண்காணிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஆக்சிஜன், மருந்துப் பொருள் தேவை; பெரு நகரங்கள் முதல் கிராமம் வரை முழுமையாக கண்காணிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமம் வரை ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் கண்காணித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:

“கிராமங்கள் முதல் சிறு நகரங்கள் வரை பெரிய மாவட்டத்திற்கு கரோனா சிகிச்சைக்காக தனியார் மற்றும் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், மருந்துகள், வெண்டிலேட்டர்களை தமிழக அரசு கண்காணித்து தேவையறிந்து அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவையை நிறைவேற்ற மேற்கு வங்கத்தில் இருந்தும், ஓடிசா மாநிலத்தில் இருந்தும், ஆக்சிஜன் ரயில் மூலம் வந்து இருக்கிறது. மேலும் தொழில் துறைகளிடம் இருந்தும் ஆக்கிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கு நல்ல ஓத்துழைப்பும் கிடைத்து இருக்கிறது.

கரோனாவிற்கு முன்னர் தமிழகத்திற்கு 100 டன் ஆக்சிஜன் தான் தேவைப்பட்டது. ஆனால் தற்பொழுது 500 டன் தேவைப்படுகிறது. கரோனா பாதித்த நோயாளிகளுக்கு, கிராமங்களில் இருந்தும், சிறு நகரங்களில் இருந்தும், திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், வேலூர், சேலம் போன்ற பெரிய மாவட்ட தலைநகரங்களுக்கு உடனடி சிகிச்சைக்காக அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

எனவே தமிழக அரசும், சுகாதாரத்துறையும் பெரிய மாவட்ட தலைநகரங்கில் உள்ள அனைத்து வசதி உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் கண்காணிக்க வேண்டும்.

மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளும், ஆக்சிஜன், வெண்டிலேட்டர், மருந்துகள் போன்றவை பற்றாக்குறை இல்லாமல் அவர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு இவை மிகவும் அவசியமாக இருக்கிறது. எனவே தமிழக அரசு மாவட்டம் வாரியாக கவனம் செலுத்தி கரோனா பரவலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”.

இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in