Published : 15 Dec 2015 09:12 AM
Last Updated : 15 Dec 2015 09:12 AM

தூத்துக்குடி ஜோயல் உட்பட 4 மாவட்ட மதிமுக செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி ஜோயல் உட்பட 4 மாவட்ட மதிமுக செயலாளர்கள் நேற்று திமுகவில் இணைந்தனர்.

மதிமுக மாவட்டச் செயலாளர் கள் எஸ்.ஜோயல் (தூத்துக்குடி), சரவணன் (நெல்லை புறநகர்), பெருமாள் (நெல்லை மாநகர்), தில்லைசெல்வம் (கன்னியாகுமரி) ஆகியோர் நேற்று மாலை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். அங்கு திமுக தலைவர் கருணாநிதி, பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் ஆகி யோர் முன்னிலையில் அக் கட்சியில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்தது குறித்து 4 மாவட்டச் செயலாளர்களும் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சி யில் எவ்வித மக்கள் நலத் திட்டங்களும் செயல்படுத்தப்பட வில்லை. சமீபத்தில் பெய்த கனமழையின்போது தமிழக அரசு நிர்வாகம் முடங்கியதால் மக்களுக்கு வரலாறு காணாத பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு எதிராக செயல் படும் அதிமுக அரசை வீழ்த்த வேண்டுமானால் திமுக தலைமை யில் வலுவான அணி அமைய வேண்டும். இந்த நேரத்தில் எதிர்க் கட்சிகளை பலவீனப்படுத்தி அதிமுகவுக்கு சாதகமாக முரண் பாடான தேர்தல் முடிவுகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எடுத்து வருகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் திமுகவில் முழு நம்பிக் கையோடு இணைந்துள்ளோம். வரும் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உழைப்போம். மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து திமுகவின் வளர்ச்சிக் காக பாடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திமுக செயலாளர்கள் புறக்கணிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 4 மாவட்ட மதிமுக செய லாளர்கள் திமுகவில் இணைந் துள்ளனர். ஆனால், திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செய லாளர் பாலவாக்கம் சோமு, சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், மதிமுக பொருளாளர் மாசிலாமணி, மாநில மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமாரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்தார்.

அதன்தொடர்ச்சியாக மதிமுக வின் 4 மாவட்டச் செயலாளர்கள் ஒரேநாளில் திமுகவில் இணைந் துள்ளனர். மேலும் சில மாவட்டச் செயலாளர்கள் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய இருப்பதாகவும், அதற்கான முயற்சியில் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டிருப் பதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x